Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜெயசூர்யா

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (11:48 IST)
இலங்கை அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் கண்டி டெஸ்ட் தொட‌ரி‌ன் முடி‌வி‌ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவுள்ளார்.

38 வயதாகும் ஜெயசூர்யா ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயசூர்யா தனது கடைசி இன்னிங்சில் நேற்று 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் சிறப்பாக இந்த இன்னிங்சின் நடுவில் இங்கிலாந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சனின் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி சாதனை புரிந்தார் ஜெயசூர்யா.

2005 ம் ஆண்டு கராச்சி டெஸ்டில் சதம் எடுத்த பிறகு கடைசி 16 டெஸ்ட்களில் ஜெயசூரியாவின் அதிகபட்ச எண்ணிக்கை நேற்று அவர் எடுத்த 78 ரன்களே என்பது குறிப்பிடத் தக்கது.

110 டெஸ்ட்களை ஆடியுள்ள ஜெயசூர்யா 6973 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இலங்கை டெஸ்ட் வீரர் ஜெயசூர்யா என்பது குறிப்பிடத் தக்கது.

403 ஒரு நாள் சர்வதேச போட்டிகளை ஆடியுள்ள ஜெயசூர்யா 12,207 ரன்களை குவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments