Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவராஜ் சிங்தா‌ன் எ‌ங்க‌ள் குறி: சோயிப் மாலிக்!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (16:00 IST)
இ‌ந்‌திய அ‌ணி ‌வீர‌ர் யுவரா‌ஜ் ‌சி‌ங் ஒரு அபாயகரமான ஆ‌ட்ட‌க்கார‌ர ். அவரை கு‌றி வை‌த்தே எ‌ங்க‌ள் ‌வியூக‌ங்க‌ள் வகு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று பா‌கி‌‌ஸ்தா‌ன் அணி‌த் தலைவ‌ர் சோ‌யி‌ப் மா‌லி‌க் கூ‌றினா‌ர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா அ‌‌ணியுட‌‌ன் 5 ஒருநாள் போட்டி 3 டெஸ்ட் போட்டிக‌ளி‌ல் மோது‌கி‌ன்றன. இத‌ற்காக பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி நே‌ற்று டெ‌ல்‌லி வ‌ந்தது.

இ‌ந்த‌நிலை‌யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி‌த் தலைவ‌ர் சோயிப் மாலிக் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல ், ச‌‌மீப காலமாக இந்திய அணி பல வெற்றிகளை குவித்து உள்ளது. இருந்தாலும் இரு அணிகளுமே சம பலம் வாய்ந்த அணியாக நான் கருதுகிறேன். சொந்த மண்ணில் இ‌ந்‌தி‌ய அ‌ணி விளையாடுவதால் அதன் பலம் அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் நா‌ங்களு‌ம் திறமையாக ஆடுவோம்.

இந்திய வீரர்கள் டெண்டுல்கர், கங்குலி, ஷேவாக் போன்றவர்கள் மிக திறமையானவர்கள ். தற்போது யுவராஜ் சிங் ந‌ன்றாக ‌விளையாடி‌க் கொ‌‌ண்டு வரு‌கிறா‌ர். அவ‌ர் ஒரு அபாயகரமான ஆ‌ட்ட‌க்கார‌ர். அவரை குறி வைத்தே எங்கள் வியூகங்கள் இருக்கும். எங்கள் அணிக்கு அக்தர் மீண்டும் வந்‌திருப்பது கூடுதல் பலத்தை தந்துள்ளது.

எ‌ங்களு‌க்கு இப்போது எந்த நெருக்கடியும் இல்லை. இதனா‌ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இந்திய வீரர்களும், ரசிகர்களும் எங்களுக்கு உற்சாகம் அளிப்பார்கள் எ‌ன்று சோ‌யி‌ப் மா‌லி‌க் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?