Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தேன் - அலீம்தார் வருத்தம்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (10:47 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 7 ஒரு நாள் போட்டிகள் தொடரில் லார்ட்சில் நடைபெற்ற இறுதி ஒரு நாள் போட்டியில் சச்சின் டேண்டுல்கருக்கு தவறாக அவுட் கொடுத்து விட்டேன் என்று பாகிஸ்தான் நடுவர் அலீம்தார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

3- 3 என்று சம நிலையிலிருந்த அந்த தொடரில் இறுதி போட்டி லார்ட்சில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் 30 ரன்கள் எடுத்திருந்த போது ஆன்ட்ரூ பிளின்டாஃப் பந்தை சச்சின் செலுத்தி ஆட முயன்றபோது மட்டை கால்காப்பில் பட்டது. இதனை தவறாக கணித்த நடுவர் அலீம்தார் பந்து மட்டையை தாக்கியதாக நினைத்து விட்டார். இங்கிலாந்து வீரர்கள் எழுப்பிய கோஷத்திற்கு கையை தூக்கினார்.

அதிர்ச்சியடைந்த சச்சின் டெண்டுல்கர் சிறிது நேரம் மைதானத்தில் இருந்து விட்டு பிறகு மெதுவே பெவிலியனுக்கு திரும்பினார். இந்தியா 188 ரன்களுக்கு சுருண்டதோடு தொடரையும் 4- 3 என்று இழந்தது.

அவுட் கொடுத்த சில நொடிகளிலேயே சச்சின் அவுட் இல்லை என்பதை உணர்ந்தேன். பிளின்டாஃப் அந்த தருணத்தில் நோ பால் வீசுவது போல் வீசி வந்தார் எனவே எனது கவனம் அதில் இருந்ததால் சச்சினுக்கு அவுட் கொடுக்கும்போது கவனமிழந்து விட்டேன் என்று செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமான அந்த ஆட்டத்தில் சச்சினுக்கு அவுட் கொடுத்தது வருத்தமாக இருந்தாலும ், அவரை திரும்பி அழைத்து ஆடுமாறு கூற முடியவில்லை ஏனெனில் தான் அது போன்று ஒரு போதும் செய்ததில்லை என்று கூறியுள்ளார் அலீம்தார்.

ஆட்டம் முடிந்தவுடன் டெண்டுல்கரிடமே தன் வருத்தத்தை தெரிவித்து விட்டதாக அலீம்தார் மேலும் கூறுகையில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments