Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (17:28 IST)
கிரிக்கெட் வீரர்களுக்கு பொழியப்படும் பாராட்டுக்களும், பணப் பரிசுகளும் தங்களுக்குக் காட்டப்படவில்லையே என்று ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியினரின் வருத்தத்தை துடைக்கும் வகையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பாரத வங்கி அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாரத அரசு வங்கியின் தலைவர் ஓ.பி. பட், ஆசியக் கோப்பையை வென்ற ஹாக்கி அணியினரை பாராட்டும் விதமாக இந்த சிறிய ரொக்கப் பரிசை அளிப்பது பாரத அரசு வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்றதற்கு இந்த ரொக்கப் பரிசு பெரியதில்லை என்றாலும், அவர்கள் மீது நாங்கள் அக்கறை செலுத்துகிறோம் என்பதனை உணர்த்துவதற்கு இதனைச் செய்வதாக பட் கூறினார்.

ஆசியக் கோப்பையை வென்ற ஹாக்கி அணியினருக்கு மத்திய அரசோ அல்லது இந்திய ஹாக்கி கூட்டமைப்போ ஏதும் செய்யவில்லை என்ற பத்ரிக்கையாளர்கள் கூட்டத்தில் கடுமையாக சாடிய அணியின் பயிற்சியாளர் ஜோகிம் கருவாலோ, ஹாக்கி வீரர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதை கண்டித்து 4 வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவித்ததை அடுத்த கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments