Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் குண்டு வெடிப்பு : உலக பேட்மிண்ட்டன் போட்டி தள்ளிவைப்பு!

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (14:26 IST)
ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பால் அங்கு செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறயிருந்த சர்வதேச பேட்மிண்ட்டன் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

உலக பேட்மிண்ட்டன் கூட்டமைப்பு நடத்த திட்டமிட்டிருந்த இந்திய ஓபன் கிராண்ட்ப்ரீ சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியா, சீனா, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளவிருந்தனர்.

ஆனால் ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்நாடுகளின் பேட்மிண்ட்டன் சங்கங்கள் பாதுகாப்பைக் காரணம் காட்டி போட்டியைத் தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தியன் ஓபன் கிராண்ட்ப்ரீ போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக போட்டிகளுக்கான ஏற்பாட்டாளர்களில் ஒருவரான புல்லேலா கோபிசந்த் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments