Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 - 20 உலக கோப்பை : தோனி அணித் தலைவர்!

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (17:30 IST)
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 20 - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணித் தலைவராக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை 20 - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலர் நிரஞ்சன் ஷா, 20 - 20 உலக கோப்பைக்கான இந்திய அணியையும், இங்கிலாந்திற்கு எதிரான ஏழு ஒரு நாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியையும் டெல்லியில் அறிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 20 - 20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி அணித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்திய அணியில் இருந்து சமீபகாலமாக நீக்கப்பட்டிருந்த வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடரில் இருந்து சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, திராவிட் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

20 - 20 அணி விவரம் :

மகேந்திர சிங் தோனி ( அணித் தலைவர் ), யுவராஜ் சிங் ( துணைத் தலைவர் ), வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், அஜித் அகார்கர், தினேஷ் கார்த்திக், கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, ஜோகிந்தர் ஷர்மா, யூசுப் பதான், பியாஷ் சவுதாலா, ஸ்ரீசாந்த், இர்பான் பதான், ருத்ர பிரதாப் சிங், ரோஹித் சர்மா.

இங்கிலாந்திற்கு எதிரான 7 ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணி விவரம்:

ராகுல் திராவிட் ( அணித் தலைவர் ), மகேந்திர சிங் தோனி ( துணைத் தலைவர் ), சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், ரமேஷ் பவார், தினேஷ் கார்த்திக், ஜாகீர் கான், முனாப் பாட்டீல், பியூஸ் சாவுதாலா, ருத்ர பிரதாப் சிங், ரோஹித் ஷர்மா, ராபின் உத்தப்பா, கவுதம் கம்பீர், அஜித் அகார்கர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments