Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பா அமெரிக்க கால்பந்து : பிரேசில் சாம்பியன்

Webdunia
திங்கள், 16 ஜூலை 2007 (11:10 IST)
கோப்பா அமெரிக்க கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி சுற்றில் பிரேசில் அணி, அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பா அமெரிக்க கால்பந்தாட்டப் போட்டி வெனிசுலாவில் நடைபெற்று வந்தது. நேற்றிரவு நடந்த இப்போடியின் இறுதியாட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரேசில் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதின.

ஆட்டத்தின் துவக்கம் முதலே பிரேசில் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் பிரேசில் வீரர் பாப்டிஸ்டா முதல் கோலடித்தார்.

ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் இரண்டாம் கோல் அடித்த பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின்னர் 69-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வாக்னர் 3-வது கோலை அடித்தார். இறுதி வரை அர்ஜென்டினாவால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் பிரேசில் அணி, அர்ஜென்டினாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதனிடையே, 3 வது இடத்திற்கான போட்டியில் உருகேவை 3 - 1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோ வீழ்த்தியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments