Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி, கார்த்திக் அபாரம் : வென்றது இந்தியா!

Webdunia
மகேந்திர சிங் தோனியின் பொறுப்பான 93 ரன்களும ், தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான 58 ரன்களும் இந்திய அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தது!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போடியில ், 251 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 46 ஓவர்களில் எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. உலக கோப்பை போட்டியில் சரியாக சோபிக்காத அதிரடி ஆட்டக்காரர் தோனி 93 ரன் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி மிர்பூர் ஷேரே பங்களா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

பூவா ? தலைய ா? வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. மழை காரணமாக 47 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது வங்கதேச அணி. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கௌதம் கம்பீரும ், வீரேந்திர ஷேவாக்கும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

வங்கதேசத்தின் பந்து வீச்சை நாலாபக்கமும் சிதறடித்த சேவாக ், 21 பந்துகளில் 30 ரன்களை எடுத்திருந்த நிலையில ், ரஸ்ஸல் வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்தாடி கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார். அதிரடியாக ஆடிய கம்பீர் 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ரஸ்ஸல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

3 வது விக்கெட்டிற்கு தோனியுடன் இணை சேர்ந்த யுவராஜ் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய அணித்தலைவர் திராவிட் 22 ரன்களுக்கும ், தினேஷ் மோங்கியா 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

144 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில ், இணை சேர்ந்த தோனியும ், தினேஷ் கார்த்திக்கும் பொறுமையாக நிலைத்து நின்று ஆடி வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட ு, அடிக்க வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்து 46 வது ஓவரின் முடிவில் 251 ரன்களை எட்டி வெற்றிக்கு வழி வகுத்தனர்.

மகேந்திர சிங் தோனி 106 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 93 ரன்களும ், தினேஷ் கார்த்திக் 60 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 58 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 6வது விக்கெட்டிற்கு சேர்த்த 107 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தது.

ஆட்ட நாயகனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

Show comments