Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நாசமாக போவார்கள்'- நித்தியானந்தா

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2013 (16:13 IST)
FILE
'' என் ஆசிரமத்தை மூடுவதற்கு திட்டமிட்ட சதானந்தா கவுடா, முதல்வர் பதவி இழந்ததை போல், என் குருகுல பள்ளியை பற்றி அவதூறாக பேசுபவர்களும் நாசமாக போவார்கள்,'' என்று நித்யானந்தா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பிடதியில், நிருபர்களுக்கு பேட்டியளித்த நித்யானந்தா கூறியதாவது:

பிடதியிலுள்ள, என் குருகுல பள்ளி பற்றி, சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். கர்நாடக முதல்வராக சதானந்தகவுடா இருந்த போது, என் ஆசிரமத்தை மூடுவதற்கு திட்ட மிட்டார். அவருக்கு சாபம் கொடுத்தேன். இதனால், அவர் பதவியிழந்தார்.

எனக்கும், என் ஆசிரமத்துக்கும் எதிராக வேலை செய்பவர்கள், அனைவருக்கும் இந்த கதிதான் ஏற்படும். மாணவர்களுக்கு நல்வழி காண்பிக்கிறேன். அவர்களுக்கு, ஆன்மிக சொற்பொழிவை அளித்து, இறை பக்தியுள்ளவர்களாக ஆக்குகிறேன்.

FILE

இதை சிலர் திரித்துக் கூறி, ஆசிரமத்துக்கும், எனக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர், என்றார்.

மேலும் நித்யானந்தா, பிடதியில் நடத்தி வரும் குருகுல பள்ளியை, லண்டனில் நடத்த அனுமதி கேட்டுள்ளார். அங்கிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அமெரிக்காவில் பள்ளியை நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

Show comments