Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நேதாஜியின் மரணத்தின் மர்மம்' மோடியிடம் கோரிக்கை!

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2013 (11:22 IST)
FILE
நேதாஜி இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர். எனவே, அவரைப் பற்றிய ரகசியங்களை பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெற்றுத்தர உதவிட வேண்டும். முகர்ஜி கமிஷன் அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, அவரது மரணம் தொடர்பான மர்மத்தை தெளிவுப்படுத்த வேண்டும்’ என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினர் குஜராத் முதல்வர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய தேசிய ராணுவ பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த 68 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை தீரா மர்மமாக இருந்து வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டெல்லியில் உள்ள ‘மிஷன் நேதாஜி’ என்ற அமைப்பு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேதாஜியின் மரணம் தொடர்பான 33 கோப்புகளின் நகலை கேட்டு மனு செய்திருந்தது.
அந்த தகவல்களை அளித்தால் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவும், நாட்டின் இறையாண்மையும் பாதிக்கப்படும் என மத்திய அரசு கூறிவிட்டது.

நேதாஜி, தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கடந்த ஆண்டில் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், இவ்விவகாரத்தில் உதவிட அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேதாஜியின் உறவினர்கள் 24 பேரின் சார்பில் அவரது மருமகனின் மகன் சந்திர போஸ் கடந்த வாரம் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை சந்தித்தார். மோடியிடம் அவர் ஒரு கடிதத்தை வழங்கினார்.
அந்த கடிதத்தில், ‘நேதாஜி இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர். எனவே, அவரைப் பற்றிய ரகசியங்களை பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெற்றுத்தர நீங்கள் உதவிட வேண்டும். முகர்ஜி கமிஷன் அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, அவரது மரணம் தொடர்பான மர்மத்தை தெளிவுப்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக பரிசீலிப்பதாக மோடி வாக்குறுதி அளித்துள்ளார் என நேதாஜியின் உறவினர்கள் கூறினர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments