Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி- பிரதமருக்கு தொடர்பு இல்லை : பிரதமர் அலுவலகம்

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2013 (18:38 IST)
FILE
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் இந்திய பிரதமருக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாவின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்ததாக வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல என கூறப்பட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளை, தொலைத் தொடர்புத்துறையின் பரிசீலனைக்கு பிரதமர் அனுப்பி வைத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பிரதமர் எழுதிய குறிப்புகளை, ஒப்புதல் கடிதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக, பிரதமரும், அவரது அலுவலகமும் ஒப்புதல் அளித்ததன் பேரிலேயே ஆ.ராசா செயல்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாயின.

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

Show comments