Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தாவின் சேவை மகத்தானது- ஜெயேந்திரர் புகழாரம்!!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2013 (19:50 IST)
FILE
அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் உள்ள நித்யானந்த தியான பீடத்திற்கு காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார்.

கும்பபுரியில் உள்ள நித்யானந்த தியான் பீடத்தையும், பரமஹம்ச நித்யானந்தரையும் நேரடியாக சந்தித்துப் பேசினார். பரமஹம்ச நித்யானந்தர் ஜெயேந்திரரை பாரம்பரிய முறைப்படி வரவேற்றார்.

" நித்யானந்த பீடம் பல வருடங்களாக பல ஊர்களில் உலகப் புகழ்பெற்று ஆசிரமங்கள் அமைத்து பல பணிகளை சீரும் சிறப்புமாக செய்து வருகிறது. அப்படிப்பட்ட மாபெரும் ஸ்தாபனம் இது.

யோகங்கள், தியானங்கள், ஸ்தோத்திரங்கள் மற்றும் பல பணிகளை செய்து உலகிற்கு பல சேவைகளைச் செய்து வருகிறது.

பரமஹம்ச நித்யானந்த சுவாமிகள் மற்றும் அவரின் இந்த உலகளாவிய இயக்கமான நித்யானந்த தியானபீடமும் உலகிற்கு செய்து வரும் சேவைகள் மிகவும் மகத்தானது.

நித்யானந்த சுவாமிகளுக்கும், தியானபீடத்திற்கும் நான் என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன். இந்த தியானபீடமும், நித்யானந்த சுவாமிகளும் மேலும் மேலும் புகழ்பெற்று விளங்கவேண்டும் என்று எல்லா வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்"

என்று ஜெயேந்திரர் கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியை எதிர்ப்பவர்கள், தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள்? பவன் கல்யாண்

இந்த ராசிக்காரர்களுக்கு வேலை சிரமங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (15.03.2025)!

அதிகபட்ச வெப்பநிலை 41 - 44 டிகிரி செல்சியஸ் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை ரயில் 25 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம்?

Show comments