Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதனையாளர்கள் 108 பேருக்கு "பத்ம" விருது - மத்திய அரசு

சாதனையாளர்கள் 108 பேருக்கு
, சனி, 26 ஜனவரி 2013 (13:15 IST)
FILE
இந்த ஆண்டின் பத்ம விருதுகளுக்கு பிரபல திரப்பட தாயாரிப்பாளர் ராமா நாயுடு, நடிகைகள் ஸ்ரீதேவி, ஷர்மிளா தாகூர், விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, பின்னணி பாடகி எஸ்.ஜானகி, மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னா ஆகியோர் உட்பட 108 பேர் "பத்ம" விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கலை, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம், தொழில் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்தெடுத்து "பத்ம" விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டுக்கான "பத்ம" விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

"பத்ம விபூஷண்" விருதுக்கு 4 பேரும், "பத்ம பூஷண்" விருதுக்கு 24 பேரும், "பத்மஸ்ரீ" விருதுக்கு 80 பேரும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் மொத்தம் 108 பேர் "பத்ம" விருதுகளை பெறுகிறார்கள்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் ரகுநாத் மொகபத்ரா, டெல்லியைச் சேர்ந்த ஓவியர் எஸ்.ஹைதர் ரசா, பிரபல விஞ்ஞானிகளான பேராசிரியர்கள் யஷ்பால், ரோதம் நரசிம்மா ஆகிய 4 பேருக்கு "பத்ம விபூஷண்" விருது வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, நடன கலைஞர் சரோஜா வைத்தியநாதன், தொழில் மற்றும் வர்த்தக துறையைச் சேர்ந்த ராமமூர்த்தி தியாகராஜன் உள்ளிட்ட 24 பேருக்கு "பத்ம பூஷண்" விருது கிடைத்துள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு, மறைந்த இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா, இந்தி நடிகை ஷர்மிளா தாகூர், விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்த ராகுல் டிராவிட், பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், நடிகரும் பாடகருமான மறைந்த ஜஸ்பால்சிங் பட்டி ஆகியோரும் "பத்ம பூஷண்" விருது பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவி, சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் டி.வி.தேவராஜன், லட்சுமி நாராயண சத்யராஜூ, சமூக சேவகர் எஸ்.கே.எம்.மைலானந்தன், கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்ஸ்ரீ பதி உள்பட 80 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

பழம்பெரும் மலையாள நடிகர் மது, பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி, இந்தி நடிகர் நானா படேகர், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டாக்டர் சுந்தரம் நடராஜன் ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

"பத்ம" விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பின்னர் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil