Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்

Webdunia
புதன், 23 ஜனவரி 2013 (13:34 IST)
FILE
தமிழகத்தில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் தேசிய அளவில் நடைபெற்ற சார்டர்ட் அக்கௌன்டன்ட் தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ கத்திலுள் ள விழுப்புரம் மாவட்டத்தை சேந்தவர் ஜெயகுமார் பெருமாள், இவர் கடந்த 25 அண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி மும்பையிலுள்ள மலாட் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றிய பெருமாள் தனது இரு பிள்ளைகளுக்கும் கல்வியின் அருமையை கற்றுகொடுத்து நன்கு படிக்க ஊக்குவித்தார்.

தந்தையின் சொல்படி நடந்த அவரது பிள்ளைகள் பிரேமலதா ஜெயகுமார் மற்றும் தன்ரஜ் இருவரும் தேசிய அளவில் நடைபெற்ற சார்டர்ட் அக்கௌன்டன்ட் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த தேர்வில் தேசய அளவில் பிரேமலதா முதலிடத்தை பெற்று அவரது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

மலாட் பகுதியில் 280 சதுர அடி இருக்கும் இடத்தில் வாழும் இக்குடும்பத்தில் பிறந்த பிரேமலதா பல சோதனைகளையும் மீறி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவேன் என எனக்கு தெரியும், ஆனால் தேசிய அளவில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு கூடுதல் உற்ச்சாகத்தை அளித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் என் குடும்பத்தினரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவேன். என்னுடன் சேர்ந்து எனது தம்பியும் இத்தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றிப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.

பலருக்கும் முன்மாதிரியாக திகழும் பிரேமலதாவிற்கு, 5 லட்சம் உதவி தொகையாக வழங்கப்படுமென கப்பல் துறை அமைச்சர் ஜி கே வாசனும், பிரேமலதாவின் சாதனையை பாராட்டி 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தி மு க தலைவர் கருணாநிதியும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.




எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

Show comments