Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் கட்டண உயர்வு சரிதான் -ப.சிதம்பரம்

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2013 (12:23 IST)
FILE
கடந்த 10 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டது சரியான நடவடிக்கை தான் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று பேட்டியளித்த போது கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், கட்டண உயர்வு சரியான நடவடிக்கைதான். எதிர்க்கட்சிகளாக இருப்பதால் இதை எதிர்க்க வேண்டிய நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ்குமார் ரயில் கட்டணத்தை உயர்த்தினார் என்பதை மறந்து விடக்கூடாது. இது ஒர ு திடமான பொருளாதார முடிவாகும்.

இதன் மூலம் பொருளாதார ரீதியில் ரயில்வேக்கு பலம் சேரும். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசியலாக்கக் கூடாது. டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

Show comments