Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின்!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (16:24 IST)
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ரஷ்டி கலந்துகொள்ள முடியாமல் போனதுபோன்றே, கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

" த ி சாட்டானிக் வெர்சஸ்" (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகத்தை எழுதி ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும், அதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக கூறி, எழுத்தாளர் சல்மான் ரஷ்டியை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர்.

அவர்களது எதிர்ப்பு காரணமாக அண்மையில் ஜெப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொள்ள முடியாமல் தனது நிகழ்ச்சியையே ரத்து செய்தார் சல்மான்.

இந்நிலையில், அவரைப்போன்றே இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானவர் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.

வங்கதேசத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவில் அடைக்கலமான தஸ்லிமா, இன்னமும் பகிரங்கமாக நடமாட முடியாமல் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் எழுதிய "நிர்பஸான்" என்ற அவரது 7 ஆவது அத்தியாய சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா,கொல்கத்தாவில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து வந்த மிரட்டல்கள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.

இத்தகவலை தஸ்லிமா, தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

Show comments