Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாநிதி மாறனை குற்றமற்றவர் என்று கூறவில்லை: ம.பு.க.

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2011 (18:49 IST)
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன் குற்றமற்றவர் என்று தாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணையை கண்காணித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றமற்றவர் என்று தயாநிதி மாறனை ஒருபோதும் நாங்கள் கூறிடவில்லை. தனது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு தன்னை தயாநிதி மாறன் வற்புறுத்தினார் என்று சி.சிவசங்கரன் கூறிய புகாருக்கு ஆதாரமில்லை என்றுதான் கூறியிருந்தோம ்” என்று ம.பு.க. சார்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் கூறினார்.

“சிவசங்கரனிடம் இருந்து ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னர் அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுடனும், அவருடைய சகோதரருடனும் மாக்சிஸ் நிறுவனம் தொடர்பில் இருந்துள்ளது என்பது இதுவரை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளத ு” என்றும் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.

ம.பு.க. தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கை பற்றி தவறான புரிதலும், தவறான ஊடக செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறிய வேணுகோபால், இதன் அடிப்படையில் ம.பு.க. நேர்மையாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

Show comments