Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நடந்துள்ள 30வது குண்டு வெடிப்பு

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2011 (14:11 IST)
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 65 பேர் காயமுற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் 25ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இன்று நடந்துள்ள குண்டு வெடிப்புக்கு அது ஒத்திகையோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று டெல்லி வழக்குரைஞர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று காலை டெல்லியின் உயர் நீதிமன்றத்தின் 5வது வாயிலிற்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டு வெடித்த இடத்தில் 4 சதுர அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், பயணப் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட இந்த குண்டின் எடை 4 கி.கி. இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

குண்டு வெடித்த இடத்திற்கு தேச புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் வந்துள்ளனர் என்றும், அவர்களோடு தேச பாதுகாப்புப் படையினரும் புலனாய்வு செய்கின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
டெல்லியில் இப்படிப்பட்ட தாக்குதல் நடக்கலாம் என்று ஜூலை மாதத்திலேயே உளவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக கூறியுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது எந்த அமைப்பு என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு முதல் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இன்று நடந்த குண்டு வெடிப்பு 30வது தாக்குதலாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளிப் பண்டிக்கைக்கு முன் டெல்லியின் முக்கிய சந்தைப் பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதலும், டெல்லியில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற சஃப்தார்ஜங் ரெயிலில் நடந்த குண்டு வெடிப்புகளும் மிக முக்கியமானவை ஆகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Show comments