Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் தேவையற்ற அழைப்புக‌ள் 27ஆ‌ம் தே‌தி முத‌ல் வராது

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2011 (09:09 IST)
செ‌ல்போ‌னி‌ல் தேவைய‌ற்ற அழை‌ப்புக‌ள், எ‌ஸ்எ‌ம்எ‌ஸ்-க‌ளை தவிர்க்க ம‌த்‌திய அரசு நடவடிக்கை எடு‌த்து‌ள்ளது. வரு‌ம் 27 ஆ‌ம் தேதி முதல் இ‌து அமலாகிறத ு.

செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்.களையும் தவிர்க்க டு நாட் கால் ரெஜிஸ்ட்ரரி பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தற்போது தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு என்று மாற்றப்பட்டு உள்ளது.

தேவையில்லாத அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க விரும்பும் பொதுமக்கள், இனிமேல் புதிய அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த அமைப்பு சில விதிமுறைகளை வகுத்து உள்ளது. புதிய முறைப்படி தொலைபேசி இலாகா 140 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க விரும்பும் பொதுமக்கள், தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு மையத்தில் பதிவு செய்து விட்டால், அவர்களுக்கு 140 என்ற எண்ணை செல் நிறுவனங்கள் அளிக்க முடியாது. இதன் மூலம் தேவையில்லாத அழைப்புகள் தவிர்க்கப்படும். இந்த அமைப்பு வர ு‌ம் 27 ஆ‌ம் தேதி முதல் செயல்பட ு‌கிறது.

இதனையு‌‌ம் ‌‌மீ‌றி தேவைய‌‌ற்ற அழை‌ப்புகளை செ‌ல்போ‌ன் ‌நிறுவன‌ங்க‌ள் தொட‌ர்‌ந்தா‌ல் கடுமையான அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌ம‌த்‌திய அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments