Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.எம்.கிருஷ்ணா உளறல்-உறுப்பினர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2011 (18:38 IST)
FILE
மாநிலங்களவையில் இன்று, இந்தியச் சிறையில் வாடும் பாகிஸ்தானியர் ஒருவர் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது கேள்வியப் புரிந்து கொள்ளாமல் அவரை விடுவிக்க பாகிஸ்தான் அரசு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனைச் செய்யவேண்டும் என்று உளறிக் கொட்டியுள்ளார் அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா!

ஏற்கனவே ஐ.நா.வில் போர்த்துக்கீசிய உரையை தனது உரையாக வாசித்து இந்தியாவுக்குப் 'பெருமை' (!) தேடித் தந்தவராயிற்றே நம் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா!

ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஷிவானந்த் திவாரி, உடல் நலம் குன்றிய சக்கர நாற்காலியில் இருந்து வரும ், சிறைகைதி டாக்டர் மொகமட் கலீல் சிஸ்டி என்பவரது கருணை மனுவும் என்னவாயிற்று என்று கேள்வி எழ ுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, "அந்த நபர் பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டுள்ளார் அவரை மனிதாபிமான அடிப்படையில் அந்த அரசு விடுவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

உண்மையில் அந்த டாக்டர் கலீல் சிஸ்டி என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டைனைக் கைதி! அவர் 1992ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். அவர் தனது உடல்நலம் குன ்ற ிய தாயாரைப் பார்க்கவந்தபோது இந்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்றார்.

பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்து சிறையில் வாடும் உடல்நலம் குன்றிய முதியவர் கலீல் கதி என்னவென்று கேட்டால் அவரை பாகிஸ்தான் அரசுதான் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கவேண்டும் என்று உளறியுள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கிருஷ்ணாவின் பதிலைக் கேட்டு மற்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர் ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அவர், "கலீல் சிஸ்டி சக்கர நாற்காலியில் உள்ளார், அவருக்கு 8-வயதுக்கும் மேல் ஆகிறது, இதனால் அவரை பாகிஸ்தான் மனிதாபிமான் அடிப்படையில் விடுவிக்க வேண்டும், தூதுவர் அளவில் இது குறித்து நாங்கள் எடுத்துச் செல்வோம்" என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பிருந்தா காரத், கிருஷ்ணாவின் இந்தப் பதிலைக் கேட்டு, நாங்கள் கேட்டது வேறு நபர் நீங்கள் கூறுவது வேறு ஒருவர் என்றார்.

கிருஷ்ணாவை உளறலில் இருந்து இம்முறைக் காப்பாற்றியவர் பிரதமர் மன்மோகன் சிங். கலீல் சிஸ்டி ராஜஸ்தான் சிறையில் இருக்கிறார் என்றும் அவரது விடுவிப்பு பற்றிய கோரிக்கை தன்னிடம் வந்தபோது உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாகவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாகக் குறிப்பிட்டார்.

டாக்டர் சிஸ்டியின் நிலை பற்றி உச்ச நீதிமன்ற மார்கண்டேய கட்ஜு ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த கலீல் சிஸ்டி இருதய நோயாளி என்றும் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு உள்ளபடியால் அவரை சிறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்றும் கட்ஜு பிரதமரிடம் சொந்தமாகவே கோரிக்கை வைத்தார் என்பதும் குறிப்பிடத்த்க்கது.

அப்போது நீதிபதி கட்ஜு குறிப்பிட்டதாவது: "டாக்டர் கலீல் சிஸ்டி இந்தியச் சிறையில் மரணமடைந்தால் அது நமது நாட்டிற்கு பெரும் இழுக்கு, அவர் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டால் இந்தியாவின் கௌரவம் உயரும்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

Show comments