Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜனதாவிலிருந்து விலகவில்லை: கோபிநாத் முண்டே

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (18:50 IST)
மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவரான கோபிநாத் முண்டே பா.ஜனதாவிலிருந்து விலகி காங்கிரஸில் சேரப்போவதாக செய்தி வெளியான நிலையில், தாம் பா.ஜனதாவிலிருந்து வெளியேறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இன்று காலை டெல்லியில்,பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜை கோபிநாத் முண்டே சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் பா.ஜனதாவிலிருந்து வெளியேறவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சும் நடத்தவில்லை என்றும் கூறினார்.

எனக்கும் கட்சியில் உள்ள சிலருக்கும் இடையே உள்ள பிரச்னைகளை மூத்த தலைவர்களிடம் தெரிவித்தேன். நான் இப்போதும் கட்சி மேலிடத்துடன் தொடர்பில் தான் உள்ளேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

Show comments