Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (08:56 IST)
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

மு தலமை‌ச்ச‌ர் உம்மன்சாண்டி, நீர்வளத்துறை அமை‌ச்ச‌ர் பி.ஜே.ஜோசப், முல்லைப் பெரியாறு அணைத் திட்ட சிறப்பு அலுவலர்கள், மாநிலங்களுக்கிடையிலான நீர் ஆலோசனைக்குழு, நீர்ப்பாசன இலாகா, வன இலாகா ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கான சிறப்பு வாகனம் வாங்குவது, அணைக்கான போதிய நிதி ஒதுக்குவது, பழைய அணை திட்டத்தை நிறுத்தி வைப்பது, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது உள்பட பல விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை தொடரலாமா என்பது குறித்து தமிழ்நாடு, கேரளா அதிகாரிகள் 24 முறை கூடி விவாதித்தும் எந்த உடன்பாடும் எட்டப்பட வில்லை. ஆகவே, இரு மாநில மந்திரிகள் மட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

Show comments