Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கையைக் காப்பாற்ற உண்ணாவிரதம் இருந்த சாமியார் மரணம்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2011 (17:46 IST)
கங்கை நதி மாசு படுவதைத் தடுக்கக் கோரியும், கங்கைக் கரைப் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளுக்கு எதிராக கங்கையைக் காப்பாற்றக் கோரி 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஹரித்வாரைச் சேர்ந்த சுவாமி நிகாமாநந்தா இன்று காலை மரணம் அடைந்தார்.

ஹரித்வாரில் இருந்த மந்திர சதான் என்ற ஆசிரமத்தில் சாமியாராக இருந்தார் நிகாமாநந்தா.

கங்கை நதி மாசுபடுவதை இவர் கடுமையாக எதிர்த்தார். அங்கு கல்குவாரிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டும் உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கி அதிபர்கள் கல்குவாரிகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்த சுவாமி நிகாமாநந்தா உண்ணாவிரதம் மேற்கொண்டார். 73 நாட்கள் வரை இவர் உண்ணாவிரதம் நீடித்தது.

இவரது போராட்டத்திற்கு எந்த வித ஆதரவும் இல்லை. தொடர்ந்து உண்ணா விரதத்தில் தீவிரம் காட்டியதால் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் மயங்கி விழுந்தார். இதனால் அவர் கோமாவிற்குச் சென்றார்.

இதனையடுத்து ஹரித்வாரில் உள்ள இமாலயன் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

இதே இமாலயன் மருத்துவமனையில் பாபா ராம்தேவும் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபா ராம்தேவைப் பார்க்க தினப்படி சாமியார்களும், அரசியல்வாதிகளும் படையெடுக்க இவரைக் கண்டு கொள்ள ஒரு ஜீவனும் அங்கு இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

Show comments