Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ்

Webdunia
செவ்வாய், 31 மே 2011 (21:29 IST)
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறத ு” என்று கூறியுள்ளார்.

எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏர்செல் நிறுவனத்தை பின்னாளில் வாங்கிய மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கும், சன் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்றங்களை ம.பு.க. பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த புலனாய்வின் அடிப்படையில் வரும் ஜூலை மாதத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தனது விசாரணையை ம.பு.க. தொடங்கும் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?

கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

Show comments