Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.200 கோடி 2ஜி லஞ்சப் பணமே: ம.பு.க.

Webdunia
திங்கள், 30 மே 2011 (20:14 IST)
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்ற ஸ்வான் டெலகாம் நிறுவனத்தின் உரிமையாளர் டி.பி.ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சியின் கணக்கில் சேர்க்கப்பட்ட ரூ.200 கோடி லஞ்சப் பணமே என்று ம.பு.க. வழக்குரைஞர் வாதிட்டார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாற்றப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பிணைய விடுதலை அளிப்பதை எதிர்த்து மத்திய புலனாய்வுக் கழக வழக்குரைஞர் யு.யு.லலித் இவ்வாறு கூறியுள்ளார்.

கனிமொழிக்கும், கலைஞர் தொலைக்காட்சியின் மேலான் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் தங்களுக்கு ம.பு.க. சிறப்பு நீதிமன்றம் பிணைய விடுதலை மறுத்துவிட்டதை எதிர்த்து செய்த மேல் முறையீட்டு மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பாரியோக் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் கனிமொழியின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் அல்டாஃப் அகமது, டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த ரூ.200 கோடி பணம் கடன்தானே தவிர, அதில் ஐயத்திற்கு இடமேதுமில்லை என்று கூறினார்.

“இவ்வழக்குத் தொடர்பான எல்லா ஆவணங்களும் ம.பு.க.விடம் உள்ள நிலையில், எதற்காக எங்களை சிறைபடுத்தி வைக்க வேண்டும ்” என்று அல்டாஃப் அகமது வினவினார்.

இதனை எதிர்த்து வாதிட்ட அரசு சிறப்பு பொது வழக்குரைஞர் யு.யு.லலித், லஞ்சமாகப் பெற்ற ரூ.200 கோடியை கடனாகப் பெற்றதாக ஒரு புகைத் திரையை உருவாக்குகின்றனர் என்று கூறினார்.

“இந்த ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனையில் இரு நிறுவனங்களும் எந்த ஒரு பத்திரத்தையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. எனவே இது ஊழல் பண பரிவர்த்தனேய ே” என்று லலித் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜித் பாரியோக், தீர்ப்பை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

Show comments