Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி வழக்கில் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை?

Webdunia
புதன், 30 மார்ச் 2011 (18:34 IST)
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

2 ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பால்வா உள்ளிட்ட ஐந்து பேர் சிபிஐ-யால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நேற்று உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரிய சிபிஐ, 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி தாக்கல் செய்வதாக உறுதி அளித்தது.

அதன்படி ஏப்ரல் 2 ஆம் தேதியன்று சிபிஐ தாக்கல் செய்ய உள்ள குற்றப்பத்திரிகையில் கனிமொழி மீதும் குற்றச்சாட்டுக்கள் இடம்பெறலாம் என்று சிபிஐ வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிபி ரியால்டி நிறுவனம்,2009-10 ஆம் ஆண்டில் கலைஞர் டி.வி.யில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக கனிமொழி மீது குற்றச்சாட்டு இடம்பெறலாம் என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments