Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2011 (12:40 IST)
ஒரிசாவிலும், ஜார்க்கண்டிலும் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரிசாவில் 9 மாவோ‌யி‌ஸ்டுகளு‌ம ், ஜார்க்கண்டில் 3 மாவோயிஸ்ட்டு களு‌ம ் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் காஷிபூர்-கல்யாண்சிங்பூர் எல்லைப் பகுதியில், காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக காவல் இயக்குனர் மன்மோகன் பிரஹாராஜ் கூறியுள்ளார்.

9 பேரின் உடல்களும், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்தாகவும், அங்கு மாவோயிஸ்ட்டுகள் முகாம் இருந்திருக்கலாம் என்றும் காவல் இயக்குனர் கூறியுள்ளார்.

இதேபோல, ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்ட மலைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Show comments