ஒரிசாவிலும், ஜார்க்கண்டிலும் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரிசாவில் 9 மாவோயிஸ்டுகளும், ஜார்க்கண்டில் 3 மாவோயிஸ்ட்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் காஷிபூர்-கல்யாண்சிங்பூர் எல்லைப் பகுதியில், காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக காவல் இயக்குனர் மன்மோகன் பிரஹாராஜ் கூறியுள்ளார்.
9 பேரின் உடல்களும், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்தாகவும், அங்கு மாவோயிஸ்ட்டுகள் முகாம் இருந்திருக்கலாம் என்றும் காவல் இயக்குனர் கூறியுள்ளார்.
இதேபோல, ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்ட மலைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.