Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லலித் மோடி விசாரணைக்கு இடைக்காலத் தடை

Webdunia
சனி, 25 டிசம்பர் 2010 (14:13 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாற்றப்பட்ட லலித் மோடி மீதான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய விசாரணைக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் நடந்த முறைகே‌ட்டிற்கு காரணமாக அப்போதைய தலைவர் லலித் மோடியை, வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து, லலித் மோடி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்நதார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜனவரி மாதம் 10ம் தேதி வரை மோடியை விசாரிக்க இடைக்காலத்தடை விதித்துள்ளனர்.

ஓழுங்குநடவடிக்கை குழுவை மாற்றியமைக்கவும் மோடி கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால்தான் தான் லண்டனில் இருப்பதாகவும் தன்னை இங்கு வந்து விசாரிக்கத் த்டையில்லை என்றும் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கழிவு நீர் டேங்கில் விழுந்து சிறுமி பலியான சம்பவம்.. 16 நாட்களுக்குப் பின் பள்ளி திறப்பு..!

இன்று டிரம்ப் பதவியேற்பு விழா.. காஞ்சிபுரம் பட்டு சேலையில் வந்த நீடா அம்பானி..!

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீங்க.. உங்க நாடகம் அம்பலம் ஆயிட்டு! - விஜய் ஆவேசம்!

குப்பைக்கூளமான மெரினா.. காணும் பொங்கல் விடுமுறை இனி ரத்து? - பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

Show comments