Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் கருத்து பொறுப்பற்றது: பாரதிய ஜனதா பதிலடி

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2010 (13:08 IST)
இந்து மத தீவிரவாதமே நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ராகுல் காந்தி கூறியது பொறுப்பற்ற பேச்சு என்றும், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத குழுக்களின் பிரச்சாரத்திற்கு துணை புரியும் பேச்சு என்றும் பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமரிடம், பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை விட, உள்நாட்டில் வளர்ந்துகொண்டிருக்கும் இந்து மத தீவிரவாதமே மிகப் பெரியது கவலையளிக்கக் கூடியது என்று ராகுல் காந்தி கூறியதாக அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் வாஷிங்டனிற்கு அனுப்பிய கடிதத்தை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ளது.

ராகுல் இவ்வாறு கூறியதை அவரோ அல்லது அமெரிக்கத் தூதரகமோ மறுக்காத நிலையில் அது உண்மையானது என்று உறுதியாகிவிட்டதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ரவி சங்கர் பிரசாத், இவ்வாறு கூறியதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத குழுக்களின் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வலு சேர்த்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

“பாகிஸ்தான் அரசும், அங்கிருந்து இயங்கிவரும் பயங்கரவாத குழுக்களும் செய்துவரும் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ராகுல் பேசியுள்ளார். ராகுலின் பேச்சு நாட்டின் பாதுகாப்பையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும் பாதிக்கக்கூடியது, பொறுப்பற்றத ு” என்று ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments