அரசியல் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியா பொருளாதார பயங்கரவாதி போன்றவர் என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.
நீரா ராடியா ரகசிய டேப்புகளில் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் குறித்தும் ராடியா பேசியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் பிரபுல் படேலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது கருத்து தெரிவிக்க படேல் மறுத்துவிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியல் தரகராகச் செயல்பட்டு வந்தவர் எப்படி இவ்வளவு செல்வாக்கு மிக்கவராக மாறினார். திடீரென அவர் புகழ்பெற்றது எப்படி என்று தெரியவில்லை. டெல்லியில் உள்ள இத்தனை பிரபலங்களையும் அவர் எப்படி அறிந்து வைத்திருப்பார் என்பது தெரியவில்லை.
ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் சொல்லி சூழ்நிலையையே கெடுத்து விடுகின்றனர். இதை நான் விரும்பவில்லை. என் மீது அவர் புகார் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் மீது நான் சட்டப்படி எந்த நடவடிக்கையையும் எடுக்கப் போவதில்லை. அரசியல் தரகராக செயல்பட்டு வந்த நீரா ராடியா பொருளாதார பயங்கரவாதி போன்றவர் என்று பிரபுல் படேல் கூறினார்.