Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் ராகுல் பாச்சா பலிக்கவில்லை: காங்கிரஸ் ஒப்புதல்

Webdunia
புதன், 24 நவம்பர் 2010 (18:34 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்களார்களில் கவருவதில் ராகுல் காந்திக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

பீகார் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை தனித்து போட்டியிட வைத்து வெற்றிபெற வைப்பேன் என்று சூளுரைத்த ராகுல் காந்தியின் விருப்பப்படியே அக்கட்சி தனித்து போட்டியிட்டது.

இத்தேர்தலுக்காக ராகுல்காந்தி பீகாரில் பல முறை வலம் வந்து, ஏழைகளின் குடிசைகளுக்கெல்லாம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் காங்கிரஸ் தலைவர் ஒருவர், பீகாரில் ராகுல்காந்தி தோல்வியடைந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்வதாகவும், பீகார் மக்களை கவர்வதில் அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments