Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யமுனையில் வெள்ளம்: தத்தளிக்கிறது டெல்லி

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2010 (13:21 IST)
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பெய்துவரும் கன மழை காரணமாக யமுனையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கிழக்கு டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

யமுனை நதியின் அபாய அளவான 204.83 மீட்டர் அளவையும் தாண்டி 177 செ.மீ. அதிகமாக 206.60 மீட்டராக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஹரியானாவில் இருந்து 30,000 கன அடி தண்ணீர் யமுனை ஆற்றில் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு திறந்துவிட்டால் யமுனை ஆற்றில் நீர்மட்டம் 206.85 மீட்டர்களாக உயரும் அபாயம் உள்ளது என்று வெள்ள கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யமுனையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை அடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதே நிலை நீடித்தால், கிழக்கு டெல்லியின் தாழ்வான பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

யமுனை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள வெ‌ள்ள‌ப்பெரு‌க்கை அடு‌த்து டெ‌‌ல்‌லி‌க்கு வரு‌ம் பல ர‌‌யி‌ல்க‌ள் உ‌ட்பட 25 ர‌யி‌ல்க‌ள் ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், 36 ர‌யி‌ல்க‌ள் வேறு பாதை‌யி‌ல் ‌திரு‌ப்‌பி ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் வட‌க்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments