Webdunia - Bharat's app for daily news and videos

Install App

600 டன் வெடிமருந்துகளுடன் சென்ற லாரிகள் மாயம்

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2010 (16:20 IST)
ராஜஸ்தானிலிருந்து மத்தியபிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 600 டன் வெடிமருந்துகளுடன் கூடிய 61 லாரிகள் மாயமாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானின் தோல்பூர் என்ற இடத்தில் உள்ள ஆர்இசிஎல் என்ற தொழிற்சாலையிலிருந்து 61 லாரிகளில், மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் "கணேஷ் மேகசின்" என்ற தோட்டா தயாரிப்பு தொழிற்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த லாரிகள் கடந்த 4 தினங்களுக்கு முன்பே மத்தியபிரதேசத்திலுள்ள குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த லாரிகள் இன்னும் வராமல் மர்மமான முறையில் மாயமாகி விட்டதாக சாகர் மாவட்ட காவல்துறை ஐஜி அன்வேஷ் மங்களம் இன்று தெரிவித்தார்.

லாரிகளுடன் காணாமல் போய் இருக்கும் வெடிமருந்துகளின் மதிப்பு ரூ.1.30 கோடி என்றும், தவறானவர்களின் கைகளில் இது சிக்கியிருக்கக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே காணாமல்போய் இருக்கும் வெடிமருந்து லாரிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் 4 தனிப்படை அமைத்துள்ளதாகவும், அவர்கள் ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் உமா சங்கர் குப்தா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த் வெடிமருந்து லாரிகளை நக்சலைட்டுகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments