Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இருக்காதது ஏன்: மம்தா பானர்ஜி விளக்கம்

Webdunia
செவ்வாய், 18 மே 2010 (19:08 IST)
யில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லியில் தங்கி தனது பணியை செய்யாமல் கொல்கத்தாவிலேயே தங்கியிருப்பதாக புகார் கூறப்படுகிற நிலையில், டெல்லி தமது சொந்த ஊர் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியானது குறித்து கருத்து தெரிவித்திருந்த மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, மம்தா பானர்ஜி டெல்லியில் தங்கி தனது பணியை செய்யாமல் கொல்கத்தாவிலேயே தங்கியிருப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் தாம் டெல்லியில் தங்கியிருக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ள மம்தா, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நாட்களில் தாம் டெல்லியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

கொல்கத்தா மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

" டெல்லி எனது சொந்த ஊர் அல்ல. கொல்கத்தாதான் எனது சொந்த ஊர். அப்படி இருக்கும் போது, பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடைபெறாத காலத்தில் தான் ஏன் டெல்லியில் தங்க வேண்டும்? என அவர் ஆவேசமாக பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சி தன்னை எப்படியாவது கொல்கத்தாவிலிருந்து கிளப்பி விட வேண்டும் என்பதற்காக இப்படி சதி திட்டங்களை தீட்டி வருவதாகவும் மம்தா தனது பேச்சில் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

Show comments