Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு எதிராக பா.ஜ. உரிமை மீறல் நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2010 (13:36 IST)
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவதற்காக பா.ஜனதா நோட்டீஸ் கொடுத்துள்ளது.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று வலியுறுத்தி இருந்தன.

இது தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்த முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முக்கிய முடிவை அவையில் தெரிவிப்பது மரபு.

ஆனால் அவ்வாறு அவையில் தெரிவிக்காமல், அவைக்கு வெளியே தெரிவித்தது அவை உரிமையை மீறுகிற செயல் என்று குற்றம் சாற்றியுள்ள பா.ஜனதா, இத் தொடர்பாக மன்மோகன் சிங்கிற்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவதற்கான நோட்டீஸை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே விலைவாசி உயர்வு தொடர்பாக எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் வெட்டு தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில், பிரதமருக்கு எதிரான உரிமை மீறல் பிரச்னை மத்திய அரசுக்கு அடுத்த சிக்கலாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் அவசரம் காட்டினோமா? சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

Show comments