Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: 24-ந் தேதி ரயில்வே பட்ஜெட்

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2010 (10:50 IST)
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையுடன ், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. விலைவாசி உயர்வ ு, உரம் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அவையில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. வரும் மே 7ஆம் தேதி வரை சுமார் மூன்று மாத காலத்துக்கு இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இரண்டு கட்டமா க, இந்த கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பட ி, மார்ச் 16ஆம் தேதி வரை முதல்கட்ட கூட்டத்தொடர் நடைபெறும். பின்னர் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று 2வது கட்ட கூட்டத்தொடர் துவங்கும் எனத் தெரிகிறது.

முதல் நாளான இன்ற ு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் உரையாற்றுகிறார். அப்போத ு, மத்திய அரசின் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார். குடியரசுத் தலைவர் உரையுடன ், இன்றைய கூட்டம் முடிவடையும்.

வரும் 24ஆம் தேதி ரயில்வே நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் மம்தா பானர்ஜியும், 26ஆம் தேதி மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தாக்கல் செய்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments