Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா கமிட்டிக்கு 7 அம்ச திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (13:08 IST)
ஆந்திராவின் 10 மாவட்டங்களைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 நபர் கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டிக்கான 7 அம்ச திட்டத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி தெலுங்கானா கமிட்டி ஆந்திராவின் அனைத்து பிரிவு மக்களிடமும் குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்க வேண்டும ், தெலுங்கானா பிரிக்கப்பட்டால் தற்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருப்பது போல் வளர்ச்சி பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பெண்கள ், குழந்தைகள ், மாணவர்கள ், சிறுபான்மையினர ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பற்றி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தெலுங்கானா உருவாக்குவது தொடர்பான தனது அறிக்கையை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிட்டி வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Show comments