Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலியாவில் மேலும் ஒரு இந்திய டாக்சி ஓட்டுனர் தாக்கப்பட்டார்

Webdunia
சனி, 16 ஜனவரி 2010 (19:04 IST)
ஆஸ்ட்ரேலியாவில் மேலும் ஒரு இந்திய டாக்சி ஓட்டுனர், அவருடைய டாக்சியில் பயணம் செய்த ஆஸ்ட்ரேலியவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

விக்டோரியா மாநிலத்திலுள்ள பல்லாராட் நகரில் நேற்று நள்ளிரவு இத்தாக்குதல் நடந்துள்ளதென அம்மாகாண காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஓட்டுனரின் டாக்சியில் வந்த 4 ஆஸ்ட்ரேலியர்களும் அவரை கேவலமாக திட்டியுள்ளதாகவும், அதில் ஒருவன் அவர் மீது எச்சில் உமிழ்ந்ததாகவும், பிறகு ஒன்றுசேர்ந்து தாக்கியதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட இந்திய ஓட்டுனரின் முகம் வீங்கியிருந்ததாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள காவல் துறையினர், இத்தாக்குதலிற்கு இனவெறி காரணம் இல்லையென்று கூறியுள்ளனர்.

இந்திய டாக்சி ஓட்டுனர் ஒருவர் நேற்றும் இதேபோல் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுவாச குழாயில் தொற்று; தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்! - சிறப்பு பிரார்த்தனை செய்யும் மக்கள்!

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்

காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

Show comments