Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2010 இறுதிக்குள் கல்விச் சீர்திருத்தம்: கபில் சிபல்

Webdunia
சனி, 9 ஜனவரி 2010 (19:40 IST)
கல்வி தொடர்பான சட்டத் திருத்தங்கள், அன்னிய கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி உள்ளிட்ட கல்வித் தொடர்பான சீர்திருத்தங்கள் அனைத்தும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

டெல்லியில் ‘பாஸ்டன் பல்கலை இந்தியா 2010 உலக தலைமை மாநாட ு ’ என்ற தலைப்பில் நடந்தக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் கபில் சிபல், கல்வி சீர்திருத்தம் தொடர்பாக எதையெல்லாம் உறுதியளித்திருந்தோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றிடும் ஆண்டு இது என்று கூறியுள்ளார்.

“2010 முடிவிற்குள், கல்வித் தொடர்பான சீர்திருந்தங்கள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். நான் அளிக்கும் உறுதிமொழி இத ு” என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக 6 முக்கிய சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Show comments