Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.ஏ.சி தலைவர் பதவி: ஜஸ்வந்த் சிங் விலகல்

Webdunia
புதன், 16 டிசம்பர் 2009 (18:59 IST)
புதுடெல்லி: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், நாடாளுமன்ற பொதுகணக்குக் குழுவின் தலைவர் பதவியில் நீடித்து வந்த நிலையில், இன்று அப்பதவியில் இருந்து விலகினார்.

பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமான முகமது அலி ஜின்னாவை தனது புத்தகத்தில் புகழ்ந்து எழுதியதற்காக ஜஸ்வந்த் சிங்கிற்கு எதிராக பாஜக மேலிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடவடிக்கை எடுத்தது.

பாஜக-வில் இருந்து அவரை நீக்கி பாஜக உத்தரவிட்டது.

அவர் வகித்து வந்த நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க அப்போதே வலியுறுத்தியது. ஆனால் ஜஸ்வந்த் சிங் அந்தப் பதவியில் இருந்து விலக மறுத்து வந்தார்.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தலைவர் பதவியில் இருந்து ஜஸ்வந்த் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

அவரது பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments