Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் மாயம்?

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2009 (15:29 IST)
ஹைதராபாத்தில் இருந்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், சித்தூர் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 8.45 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ராஜசேகர ரெட்டியின் விமானம் திட்டமிட்டபடி 10.40 மணிக்கு சித்தூர் மாவட்டத்திற்கு சென்றடைய வேண்டும்.

ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் விமானத்தைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

துவக்கத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்தகவலை சித்து மாவட்ட காவல்துறை துணை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மறுத்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ராஜசேகர ரெட்டி பாத்திரமாக இருக்கிறாரா? என்பது குறித்த தகவலை ஆந்திர அரசு அதிகாரிகள், காவல்துறையினர் இதுவரை உறுதி செய்யாததால் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பு நீடித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

சென்னை செண்ட்ரல், கடற்கரை உட்பட 19 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Show comments