பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட உள்கட்டமைப்பு அமைச்சரவை கமிட்டி ஒன்றை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது.
நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், திட்டங்கைள விரைவில் நிறைவேற்றவும் இக்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இக்கமிட்டியில் , மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வேளாண் அமைச்சர் சரத்பவார், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, எரிசக்தி துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் பரூக் அப்துல்லா, ஜெய்பால் ரெட்டி, கமல்நாத், ஏ. ராசா, சி.பா. ஜோஷி, குமாளி செல்ஜா, ஜி.கே. வாசன், பி.கே. பன்சால், பிரபுல் படேல், பிரிதிவிராஜ் சவுகான் ஆகிய மத்திய அமைச்சர்களும, திட்டக் கமிஷன் துணை தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா ஆகியோரும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.