Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே-யில் நிதி முறைகேடு - பாஜக குற்றச்சாற்று

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2009 (20:02 IST)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் நிதி முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், சத்யம் நிதி நிறுவனத்தில் நடைபெற்றதைப் போன்று ரயில்வே பட்ஜெட்டில் சூழ்ச்சி உள்ளதாகவும் பாஜக குற்றச்சாற்றியுள்ளது.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இன்று ரயில்வே பட்ஜெட் குறித்த விவாதம் தொடங்கிய போது, இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் இவ்வாறு கூறினர்.

பாஜகவின் இந்தக் குற்றச்சாற்றை முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் மறுத்துள்ளார்.

மக்களவையில் ரயில்வே விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பாஜக-வின அன்ந்த குமார்,

ரயில்வே துறையானது கடந்த 5 ஆண்டுகளில் சூழ்ச்சியுடன் கூடியதாக செயல்பட்டு வந்ததாகவும், சத்யம் நிறுவனத்தைப் போன்று ரயில்வே நிதி வேறுவகையில் பயன்படுத்தப்பட்டதாகவும் குறை கூறினார்.

இதேபோன்ற குற்றச்சாற்றை மாநிலங்களவை பாஜக தலைவர் அருண் ஜேட்லியும் முன் வைத்தார்.

ரயில்வே கணக்குகள் லாலு பிரசாத் தலைமையில் இருந்த போது, திரிக்கப்பட்டதாக ஜேட்லி குற்றம்சாற்றினார். பாஜக-வின் இந்தக் குற்றச்சாற்றுக்கு லாலுபிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தமிழகத்தில் மழையா? என்ன சொல்கிறது வானிலை அறிவிப்பு..!

இன்று ஏவப்பட இருந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

புயல் பாதிப்புக்குள்ளான தமிழகத்திற்கு உதவ தயார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!

104 வயது கொலை குற்றவாளிக்கு ஜாமீன்.. நிரந்தர விடுதலை கிடைக்குமா?

தமிழிசை சௌந்தரராஜன் திடீர் கைது.. என்ன காரணம்?

Show comments