Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவ மாற்றம் குறித்த தேசிய செயல் திட்ட‌த்‌தி‌ற்கு நிதியுதவி

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (20:16 IST)
சென்ற ஆண்டு வெளியான பருவ மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதைத் தொடர்ந்து எட்டு தேசிய இயக்கங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய ‌ நி‌தி‌நிலை அ‌றி‌க்கை‌‌யி‌ல் வகை செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ‌ நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனை‌த் தெரிவித்தார்.

பருவ மாற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் நிலையான சூழலை மேம்படுத்துவதற்கான நெறிமுறைகளை இந்த செயல் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

தேசிய ஆறு மற்றும் ஏரிகள் பாதுகாப்பு திட்டத்திற்காக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூ‌றிய ‌பிரணா‌ப், 2008-09 இல் ரூ.335 கோடியாக இருந் த‌ ‌நி‌தி, 2009-2010 இல் ரூ.562 கோடியாக உயர்ந்துள்ளது.

தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையம் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதாக கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌பிரணா‌ப், டேராடூனிலுள்ள இந்திய வன ஆய்வு மற்றும் கல்விக் குழு ஆய்வு கல்வி மற்றும் விரிவாக்க பிரிவு செய்த சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித ்தா‌ர்.

இந்திய தா வ ரவியல் ஆய்வு மையம், விலங்கியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு மையம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments