Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிர் காக்கும் மருந்துகள் விலை குறைப்பு

உயிர் காக்கும் மருந்துகள் விலை குறைப்பு
, திங்கள், 6 ஜூலை 2009 (15:19 IST)
இன்ஃப்ளூயன்ஸா தடுப்பு மருந்து (Influenza vaccine) மற்றும் மார்பகப் புற்றுநோய், ஹெபடைடிஸ்-பி உள்ளிட்ட 9 வகை நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கான சுங்க வரி (ஏற்றுமதி/இறக்குமதி) குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் மூலப்பொருட்களுக்கான வரியை 10 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக அரசு குறைத்துள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

தவிர மேலும் இரண்டு உயிர் காக்கும் மருந்து கருவிகளுக்கான இறக்குமதி வரியை 7.5 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக அரசு குறைத்துள்ளதாக பிரணாப் முகர்ஜி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil