Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்ட் அமைப்புக்கு தடை ஏன்: ப.சிதம்பரம் விளக்கம்

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2009 (11:50 IST)
மாவோயிஸ்ட் அமைப்புக்கு தடை விதித்தது ஏன் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

கடந்த 2004ம் ஆண்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் ஆகிய தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதையடுத்து, அந்த இரு அமைப்புகளும் இணைந்து, `சி.பி.ஐ.-மாவோயிஸ்ட்' என்ற தீவிரவாத அமைப்பாக மாறின. அந் த அமைப்பு தீவிரவாத அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால ் தடை விதிக்கப்படுகிறது.

இந் த அமைப்புக்கு ஆந்திரா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசும், குற்றவியல் சட்ட திருத்த சட்டத்தின் 16வது பிரிவின்கீழ், மாவோயிஸ்ட் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை கோரிக்க ை விடுத்துள்ளேன ். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மாவோயிஸ்ட் அமைப்புக்கு தடை விதிப்பதில் மேற்கு வங்க அரசுக்கு உடன்பாடில்லை என்று தெரிகிறது. இவ்விவகாரம் குறித்து முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது அமைச்சரவையை கூட்டி ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments