Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற துணை சபாநாயகராகிறார் பா.ஜ.க.வின் கரிய முண்டா

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2009 (17:41 IST)
நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக பா.ஜ.க.வைச் சேர்ந்த கரிய முண்டா நாளை போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

நாடாளுமன்ற சபாநாயகராக மீரா குமார் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு கொடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு செய்தது.

அதன்பட ி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில ் துணை சபாநாயகர் பதவி வேட்பாளராக கரிய முண்டா தேர்வு செய்யப்பட்டார். அவரது வேட்புமனுவில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கையெழுத்திட்டுள்ளார். கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் வழிமொழிந்து இருக்கிறார். மற்றொரு வேட்புமனுவ ை, பாராளுமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் சுஷ்மா சுவராஜ் முன்மொழி ய, ஆனந்த் குமார் வழி மொழிந்து இருக்கிறார்.

காங்கிரஸ் சார்பிலும ், கரிய முண்டாவுக்காக மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மனுவை பாராளுமன்ற கட்சித்தலைவர் பிரணாப் முகர்ஜி முன்மொழிய, மத்திய மந்திரி பவன் குமார் பன்சால் வழிமொழிந்து இருக்கிறார்.

கரிய முண்டாவைத் தவி ர, வேறு யாரும் துணை சபாநாயகர் பதவிக்கு மனுவும் தாக்கல் செய்யாத காரணத்தால், நாளை நடக்கும் துணை சபாநாயகர் தேர்தலில ் கரிய முண்டா போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments