Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்த் தடுப்பில் செவிலியர்கள் முக்கியப் பங்கு - பிரதீபா பாட்டீல்

Webdunia
செவ்வாய், 12 மே 2009 (15:58 IST)
அனைவருக்கும் ஆரம்ப சுகாதாரத்தை அளிக்கும் தேசிய நோக்கத்தை நிறைவு செய்வதில் செவிலியர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உலக சுகாதார தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அவர்களின் வீட்டிலேயே மருத்துவ சேவை வழங்குவதற்கான முயற்சிகளை செவிலியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கிராமப்புறங்கள், மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் பகுதியிலும் மருத்துவ சேவை வழங்க செவிலியர்கள் உதவ வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

நோய்களைத் தடுப்பதிலும், ஆரோக்கியமான நிலையை வழக்கப்படுத்திக் கொள்ளும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் செவிலியர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும் என்றும் பிரதீபா பாட்டீல் குறிப்பிட்டார்.

செவிலியர்கள் தங்களின் அடிப்படை கடமையோடு, சமூக பொறுப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை.. பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!

நாளை காணும் பொங்கல்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!

வெளிநாட்டினரிடம் வரி வசூலிக்க புதிய துறை.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!

வேலை நீக்கம் செய்கிறது மெட்டா நிறுவனம்.. 3600 பேருக்கு இமெயில் அனுப்பியதாக தகவல்..!

காதலனை தான் திருமணம் செய்வேன்.. வீடியோ வெளியிட்ட மகளை சுட்டு கொன்ற தந்தை..!

Show comments