Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் பிரதமராகும் வாய்ப்பில்லை- சோனியா

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (16:09 IST)
இந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரதமராக மன்மோகன் சிங்தான் பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியிருக்கிறார்.

அலகாபாத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், இந்த தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் பதவி ஏற்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான வேட்பாளர் குறித்து கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் கேள்வி எழுப்பிய சோனியாவிடம், ராகுல் காந்தியின் பெயரை குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த தேர்தலில் பிரதமர் பதவியேற்பது மன்மோகன் சிங் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும், பிற்காலத்தில் ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்கக்கூடும் என்றும் சோனியா கூறினார்.

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக பாஜகவும், முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் மென்மையான போக்கைக் கடைபிடித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியிருப்பதில் பாக் மண்ணில் உள்ள பயங்கரவாதிகளுக்கான தொடர்பை பாகிஸ்தான் முதல்முறையாக ஒப்புக் கொண்டதையும் சோனியா சுட்டிக்காட்டினார்.

தமது குடும்பத்திற்கும் அலகாபாத் நகருக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு என்றும் அவர் கூறினார்.

வறுமையை ஒழிக்கவும், மக்களின் துன்பங்களைப் போக்கவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் மட்டுமே முடியும் என்பதால், மீண்டும ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மலர மக்கள் வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!

அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..!

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

Show comments